முட்டை விலை குறித்து இன்று முக்கிய தீர்மானம்!!



முட்டை விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிறைவேற்று சபை மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் கூடி ஒரு தீர்மானக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போதைய விலையை நிலைநிறுத்துவது அல்லது விலையை குறைப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விலை திருத்தம் செய்யப்பட்டால், திங்கட்கிழமை காலை முதல் அமுலுக்கு வரும் என்றார்.

எதிர்வரும் நாட்களில் முட்டைக்கான தேவையும் குறையும் எனவும், எனவே நியாயமான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.




Post Comments

Powered by Blogger.