மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜை!!


மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  சித்திரைப் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட பூஜைகள் வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக, ஹோமம் பூசைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து விசேட அபிசேக பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அடியார்கள் புடை சூழ வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக அம்பாளுக்கு தீபாராதனை பூஜை வசந்த மண்டபதில் இடம்பெற்றது. 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன், ஆலய குருக்களினால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாழ்ந்து வரும் சிங்கள தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் ஒரே சமய நம்பிக்கைகளைக் கொண்டு ஓரினத்தவர்களாக வாழ்ந்து வந்ததாலேயே நாட்டில் பூர்வ குடியினரான சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சித்திரப் புத்தாண்டைச் சிறப்புடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.