சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிக்க திட்டம் - சுற்றாடல் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!!


கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், தலைமையில்  மாவட்ட  செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜாவின்  எற்பாட்டில் நேற்று (10) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க மாகாண மட்டத்தில்  சுற்றாடலைப் பாதுகாக்கும் உபகுழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய வலையமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

மாவட்ட மட்ட  மற்றும் பிரதேச மட்டத்தில் இளைஞர்களை, இச்செ யற்பாடுகளில் ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் இத்திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர்  தெரிவித்தார். 

இந்நிலையில் சுற்றாடலில் உள்ள மனிதன் முதல்  சகல ஜீவராசிகளையும் இயற்கை அனர்த்தங்களின் அழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்குதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும்  கண்டல் தாவரங்களை  மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றை புதிதாக நடுதல் மூலம் உயிர்ப் பல்வகைமையை அதிகரிப்பதற்காகவும்  இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.                                                                            அந்தவகையில்  பொருத்தமான நிகழ்ச்சித் திட்டங்களை  அடையாளம் கண்டு, பசுமையான சமூக செயற்பாட்டினால் நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நசீர் அஹமட்  சுட்டிக்காட்டியுள்ளார்                          

இந்நிகழ்வில்  மத்திய சுற்றாடல் அதிகார  சபை தலைவர் சுபுன்.எஸ். பத்திரகே, கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர்  எம்.சிவகுமார், மற்றும் அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.