நாட்டின் 8 மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு நீர் பருகுமாறும் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பிலும் இக்காலகட்டத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடினமான வேலைகளை மட்டுப்படுத்துமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச்செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.