உலக சித்தர்கள் தினத்தில் சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராகுல் ஐயர் சித்த ஆயுள்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் அதன் நிறுவனர் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயர் தலைமை இடம் பெற்றது.
ஏறாவூர் ஆயுர்வேத சித்த வைத்தியசாலை வைத்திய அத்தியச்சகர் எம்.எஸ்.எம்.லாபிர், வந்தாறுமூலை மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் வைத்தியர் எஸ்.நிலோஜா ஆகியோர் கலந்துகொண்டு சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் அ.கந்தசாமி உட்பட சமூக நலன் சார்ந்து சிந்தனை கொண்டவர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அகில உலக இளம் சைவ மன்றம் எனபன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.