பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது.
குறித்த செய்தியானது வெறும் வதந்தி என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை(17) வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.