தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு கல்வி வௌியீட்டு திணைக்களத்திலிருந்தே பாடப்புத்தகங்கள் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன.
பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களும் இவ்வாறு விநியோகிக்கப்படுவதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 33 மில்லியன் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அதற்காக 16,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.