இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி நேற்றாகும்.
இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இடம்பெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளான பெரிய வெள்ளி, இயேசு கிறிஸ்து உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும்.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் உட்பட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் கூறிய, 7 திருவசனங்களை அடிப்படையாக வைத்து பிரசங்கங்கள் நடைபெறும்.
இந்நிலையில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை நினைவுக்கூறும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.