ஆரையூர் விளையாட்டு கழகத்தின் புதுவருட சித்திரை விளையாட்டு விழாவனது உப தலைவர் சண்முகராசா பிரதீப் தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் (16) இடம் பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான ஆரையூர் விளையாட்டு கழகத்தினால் சித்திரைப் புதுவருட கலாசார விளையாட்டு நிகழ்வினை எற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது மரதன் ஓட்டம், தோணி ஓட்டம், பெண்களுக்கான சமநிலை ஓட்டம், ஆண்களுக்கான சமநிலை ஓட்டம், யனைக்கு கண் வைத்தல், தலையணை சமர், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் வினோத உடைப்போட்டி, தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தல் மற்றும் ஆப்பிள் உண்ணுதல் போன்ற விளையாட்டுக்களும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் ஶ்ரீ கந்தசுவாமி ஆலய பிரதமகுரு சோதிநாதக்குருக்கள், ஆரையம்பதி அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி ஶ்ரீகண்ணகி ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபை தலைவர் கே.மனோராஜ் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு புதுவருட விழாவினை சிறப்பித்தனர்.