வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி செய்யாத அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு ஜனவரி மாதமளவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான செயலாளர்களின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களைப் பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குச் சில செயலாளர்கள் உதவவில்லை என்று சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டதைத் தொடர்ந்தே ஜனாதிபதி மேற்படி முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.