டீசலின் விலையை (Auto Diesel) 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.
புதிய விலை
இதன்படி, தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.