இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைதீவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற நட்புறவை மையமாகக் கொண்டு இந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், மாலைத்தீவு உப ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத்துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை வேண்டினார்.