முட்டை பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது, உணவில் முட்டை, ஆம்லெட், முட்டை தொக்கு, போன்றவை இல்லாமல் பலருக்கும் சோறு வாய்க்குள் இறங்காது.
தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து காண்போம்.
ஆய்வில் தகவல்
தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். இது உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.
எனவே, முடிந்தவரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
தினமும் ஒரு முட்டை
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.
முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.