கத்தார் உலகக் கோப்பையை குரோஷியா வென்றால், நிர்வாணமாக செல்வேன் என்று, கத்தாரில் கவர்ச்சி காட்டிவரும் அழகி உறுதியளித்துள்ளார்.
உலகக் கோப்பையின் தீவிர ரசிகை என அழைக்கப்படும் முன்னாள் 'மிஸ் குரோஷியா' அழகி இவானா நோல் (Ivana Knoll), குரோஷியா அணி மட்டும் 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக செல்வேன் என்று கூறியுள்ளார்.
டிசம்பர் 18 அன்று நடக்கவுள்ள இறுதிப்பட்டியில் தனது நாடு முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றால், தான்கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக செல்வதாக உறுதியளித்துள்ளார்.
30 வயதான குரோஷிய மாடல் இவானா நோல், குரோஷியா நாட்டு கொடியின் செக்கர்ஸ் வடிவங்களை உள்ளடக்கிய ஆடைகளை கவர்ச்சிகரமாக அணிந்து உலகக்கோப்பை போட்டிகளில் குரோஷியா அணியையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்.
வெள்ளிக்கிழமை நடந்த பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், குரோஷியா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.
இந்நிலையில், குரோஷியா அணி (கத்தார் நேரப்படி) டிசம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.