மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு (26) திகதி இடம்பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அனர்த்தங்களால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் தேசிய பாதுகாப்பு தினத்தை மையப்படுத்தி அனர்த்தங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தார்.