உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என தகவல்

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்த வாரம் தனது அலுவலகம் இதைச் செய்ய விரும்பிய போதிலும், அது ஒரு வாரம் தாமதமாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. தேர்தலை நடத்துவதற்கு தனது அலுவலகம் தயாராக உள்ளது என்று கூறிய அவர், இந்த முறை புதிய வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு

தற்போதுள்ள பெட்டிகளை பழுதுபார்த்து அவையே பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பேச்சாளர் ஒருவரை நியமிக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. சுமார் 8,000 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.


Powered by Blogger.