நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அரிசி இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.