கிழக்குப் போராளிகளின் படுகொலைக்கு தாமே பொறுப்பு முன்னாள் போராளி பகிரங்கம்

கிழக்குப்
போராளிகளின் படுகொலைகளுக்கு தாமே பொறுப்பு என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.




தமிழீழ விடுதலைப்
புலிகளிலிருந்து கிழக்குப் போராளிகள் பிரிந்து சென்றபோது வெருகல் ஆற்றாங்கரையில் நிராயுதபாணிகளாக
நின்ற கிழக்குப் புலிகள் மீது வன்னிப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது. இத் தாக்குதலில்
200 க்கு மேற்ப்பட்ட கிழக்குப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.



 படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் உடல்கள் வெருகல்
ஆற்றில் தூக்கி வீசப்பட்டதுடன் உடல்களை உறவினர்களோ கிழக்குப் புலிகளோ எடுத்துச் செல்லவிடாது
தடுக்கப்பட்டிருந்ததுடன் நாய்களும் நரிகளும் உடல்களை கொண்டு சென்ற நிலை காணப்பட்டது.



 



வெருகல் ஆற்றாங்கரையில்
சண்டை நடந்தபோது ஒரு மாதம் வெருகல் ஆற்றிலே நின்று கிழக்குப் போராளிகளை தான் கைது செய்ததாகவும்
கிழக்குப் போராளிகளின் முழங்காலுக்குக் கீழ் சுட்டு பிடிக்கும்படியும் தளபதி ரமேசிடமிருந்து
தமக்கு உத்தரவு வந்ததாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின்
தலைவர் கந்தசாமி இன்பராசா கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.



 



வெருகல் ஆற்றங்கரையில்
நடந்த சகோதரப் படுகொலையில் 200 க்கு மேற்ப்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டதுடன்
நூற்றுக்கணக்கான கிழக்குப் போராளிகள் காணாமலும் போயுள்ளனர். வெருகல் படுகொலை மற்றும்
அதன்  பின்னரான காலப்பகுதியில் 500 க்கு மேற்ப்பட்ட
கிழக்குப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.



 



படுகொலை செய்யப்பட்ட
மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட 500 க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும்
பொறுப்புக் கூறவேண்டியவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்      கட்சியின்
தலைவர் கந்தசாமி இன்பராசாவே.



வெருகல் படுகொலையின்போது
தான் வெருகல் ஆற்றாங்கரையில் ஒரு மாதம் களத்தில் நின்றதாகவும் கிழக்குப் போராளிகளின்
முழங்காலுக்குக் கீழ் சுட்டு அவர்களைக் கைது செய்யும்படியும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும்
தனது ஊடக சந்திப்பிலே தெரிவித்துள்ளார்.



 



கிழக்கிலே
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல்போன கிழக்குப் போராளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்
நடாத்தப்படுமா? படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் உறவுகளுக்கு நீதி கிடைக்குமா?



 



 


Powered by Blogger.