மட்டக்களப்பில் புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாக திகழும் புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரதத்தினை முன்னிட்டு ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
விநாயகர் சஸ்டி விரதமானது வெகு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு 19வது நாளான இன்று விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இச் சூரசம்கார நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பிவிசாந் சிவாச்சாரியாரினால் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வசந்த மண்டப பூசையினை தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று, கஜமுகா சூரசங்கார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு வெளி வீதியில் கஜமுக சூர வதம் வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும், ஆலய வரலாற்றில் முதன் முறையாகவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.