சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏறாவூர் பற்று நகர சபையின் உறுப்பினர் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றய தினம் 24/04 அன்று ஏறாவூர் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஏறாவூர் பிள்ளையார் கோவில் வீதியில் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
இச் சுற்றிவளைப்பில் ஏறாவூர் நகரசபை 01ம் வட்டார உறுப்பினர் நடேசபதி சுதாகரனுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட்தக்கது.