பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு








நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


என்ற போதும் மார்ச் மாதம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையரொருவர் அடையாளம் காணப்பட்டார்.


இதனையடுத்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. என்ற போதும் தற்போது வரையில் இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை.




இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்ற தேர்தலானது ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜுன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டுமாக இருந்தால் மே மாத இறுதியிலிருந்து தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


எனினும் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிக்க முடியா விட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.





Powered by Blogger.