நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!



ஸ்ரீலங்காவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் முறைப்பாடுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளார்.


மக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 24 மணி ரேரமும் திறந்திருக்கும்.


எனது பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.


அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை 011-4354550 / 0114354655 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும்.


இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாது போனால் அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 3872/ 3873/ 3874/ 3875 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.




மக்கள் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கபில குணசிங்கவின் (077-3743718) என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.


கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்துவதற்காக 0112860003 / 0112860004 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.


0112354354 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.


மக்கள் வழங்கும் தகவல்களை குறித்த துறைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


என்னால் வழங்கப்படும் உத்தரவுகள், பணிப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.