வாழைச்சேனை பொதுச் சந்தை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விடுக்கும் விஷேட அறிவித்தல்.











நாட்டில் தற்சமயம் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தளர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் வாழைச்சேனை பொதுச் சந்தையில் எதுவித வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடாது என சபையின் தவிசாளர் உத்தரவு பிறப்பித்துளளார்


குறித்த உத்தரவில் ' இன்றைய தினம் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அத்தியட்சகர், மற்றும் தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்களில் நடமாடும் வியாபாரங்களை செய்பவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ளுமாறும், குறித்த நேரத்தில் சந்தைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவார்கள்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஊரடங்கு தளர்த்தலின் போது வாழைச்சேனை பொதுச் சந்தையில் கூடிய மக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதனாலேயே இன்று இவ் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.