கொரோனா வைரஸின் கடினமான சூழல்! ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை



தற்போது நாட்டில் கொரோனா தொற்று தொடர்பில் ஏற்பட்டிருக்கு நெருக்கடியான சூழலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரருக்கு விளக்கமாக எடுத்துள்ளார்.






இன்றைய தினம் அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரரை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஜனாதிபதி இந்த விளக்கத்தினை கொடுத்திருக்கிறார்.


இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் கருத்துப்பதிவு செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய,


“அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு அரசினால் மேற்க்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ப்பில் அவருடன் கலந்துரையாடப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அவர்களை இன்று சந்தித்தேன். அவர் இந்த கடினமான நேரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி எனக்கு அறிவுரை வழங்கியதை நான் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.