ஸ்ரீலங்காவில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்கள்!



கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர் என நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.







இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கையில்...


நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோன வைரஸ் நோயாளி தனது நோயை யாரிடமும் சரியான முறையில் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். அவர் பல்வேறு இடங்களில் ஒன்றுகூடல்களில் கலந்துகொண்டுள்ளார்.


குறித்த நோயாளி கடந்த நாட்களாக கொழும்பின் பல நகரங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.


இவ்வறான ஒரு நபரால் நாடு முழுவதும் நோய் தொற்றினை பரவ செய்ய முடியும். குறித்த நபரும் அவரது தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனை தனியார் மருத்துவமனைகளில் உறுதி செய்து கொண்டுள்ளனர்.


எனினும் அது தொடர்பில் அறிவிக்காமல் பல்வேறு பகுதிக்கு சென்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் கடந்த 18 ஆம் திகதி குறித்த நபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.