என் மனைவி எதையும் சாப்பிடவில்லை! கற்களை சாப்பிட முடியாது... ஊரடங்கால் கணவர் அனுபவித்த வேதனை








இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் காரணமாக சொந்த ஊருக்கு நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் பல மைல்கள் கடந்து நடந்தே வந்துள்ளார்.





கொரோனா அச்சத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





இதனால் பொதுமக்கள் திணறிவிட்டனர். யாராலும் எங்கேயும் பயணிக்க முடியவில்லை, முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள முடியவில்லை.


அதேபோல, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்து தங்கி வேலை பார்த்து வருபவர்களாலும் திடீரென சொந்த ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.





இப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் நாக்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.





உடனே ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து கிராமத்தை அடைந்துள்ளார். அவருடன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.







அவர் கூறுகையில், கையிலும் பணம் இல்லை, குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லை.





ரொம்ப கஷ்டப்பட்டு தான் 2 நாளும் நடந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. என்னை விடுங்க, சமீபத்தில் குழந்தை பெற்ற என் மனைவி என்ன சாப்பிடுவாள்? வழியெல்லாம் கற்கள், கல்லை சாப்பிட முடியுமா? எங்களுக்கு யாரும் உதவவில்லை.





சப்பாத்தியும், அதுக்கு தொட்டுக்கொள்ள உப்பும் கிடைச்சாலே போதும் என இருந்தோம். அதுகூட எங்களுக்கு கிடைக்கவில்லை, இதையடுத்து ஊருக்கு வந்த பின்னரே உணவு கிடைத்தது என வேதனையுடன் கூறியுள்ளார்.



Powered by Blogger.