இத்தாலியில் இருந்து நாட்டுக்குள் வந்து தப்பிச் சென்ற இலங்கையர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரையில் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்களையே சுகாதார அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால், மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து வந்தவர்களின் மூலமே அதிகளவான தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை வந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது சுகாதார பணிப்பாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து தப்பியோடியவர்கள் உடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தவிர்ப்போரை கண்டறிய இராணுவ புலனாய்வு பிரிவு பயன்படுத்தப்படும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.