நாட்டு மக்களிடம் பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை






நாட்டில் ஊரடங்கு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பிரமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, மனிங் சந்தை உள்ளிட்ட அனைத்துப் பொருளாதார நிலையங்களுக்கும் மரக்கறிகள், பழங்கள், தேங்காய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்குத் தேவையான அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.





இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.





விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்கள் சிரமங்களின்றி சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றியும் அடைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, பொலிஸ்மா அதிபருக்கு இப்பணிப்புரைகளைப் பிரதமர் வழங்கியுள்ளார்.







இப்பணிப்புரையைப் பிரதமர் வழங்கும்போது, தற்போது உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் பொறிமுறையில் உள்ள சிரமங்கள், இடையூறுகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டிருந்தார்.


அதேபோல், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவலை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாமெனப் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர், இத்தொற்றானது உலகம் முழுவதும் பேரழிவுமிகுந்த தொற்றாக வேகமாகப் பரவிவரும் நிலையில், மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.


Powered by Blogger.