நடிகர் கமல் ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தினால் சர்ச்சை!



தென்னிந்திய நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவரை மாநகராட்சி தனிமையில் இருக்க உத்தரவுட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.




முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனை எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி வரை தனிமையில் இருக்குமாறு சென்னை மாநகர சபை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும் கமல் தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



எவ்வாறாயினும் கமலின் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதாக ஒட்டப்பட்ட பிரசுரம் தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் விளக்களித்துள்ள மாநகராட்சியினர்,


கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது என்று விளக்கமளித்துள்ளனர்.


இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து 110 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.


இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது, இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதற்கிடையில் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறது. 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Powered by Blogger.