இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட தயாராகும் ஜனாதிபதி






தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.








கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.







சில அடிப்படை தேவைகளை கருத்திற்கு கொண்டு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் தீர்மானத்தில் ஜனாதிபதி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





ஏப்ரல் 30ஆம் திகதி பின்னர் இடைக்கால கணக்குகள் நிறைவடைந்த பின்னர் அரசாங்க செலவுகளுக்கு பணம் ஒதுக்கிக் கொள்ள வாய்ப்பு இல்லாமை,, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை காரணமாக மேலும் 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லாமை மற்றும் பொதுத் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் பிற்போட முடியும் என்பதனால் நாடாளுமன்றத்தை கூட்ட வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Powered by Blogger.