மட்டக்களப்பில் ஊரடங்கு-வீடுகளுக்கு சென்று பொருட்களை விற்பனை செய்ய வர்த்தகர்களுக்கு பொலிஸார் அனுமதி-அரசாங்க அதிபர்





மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கு சென்று அனைத்து  பொருட்களையும் வழங்குவதற்கு அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தக நிலையங்களுக்கு உரிய அனுமதியினை(பாஸ்) பொலிஸார் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.







ஊரடங்கு தளர்த்தப்படும் சார்ந்தர்பத்தில் பேருந்து, வர்த்தக நிலையங்களில் கூடும் அதிகளவான கூட்டத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது.





நாளை மட்டக்களப்பில் சத்தோச நிலையங்கள்  மூன்று இடங்களில் திறக்கப்பவிருக்கின்றது அதில் மட்டக்களப்பு-கள்ளியங்காடு, கழுவாஞ்சிக்குடி, காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்கி கொள்ள முடியும், ஊரடங்கு நேரத்திலும் அவர்கள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்குரிய பொதிகளை அவர்கள் விற்பனை செய்யவுள்ளார்கள. அவர் மேலும் தெரிவித்தார்.


Powered by Blogger.