மட்டக்களப்பில் பட்டதாரிகள் நியமன முரண்பாடு ஒருவர் தற்கொலை முயற்சி!





மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் சங்க தலைவர் கே.அணிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்மையில் வழங்கப்படும் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள்.







பட்டதாரிகள் நியமனத்திற்கும் தேர்தலுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்று முன்பு கூறப்பட்டது. இன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டது என்றும் தேர்தலை மையப்படுத்தி நியமனங்கள் வழங்குவதால் இரத்து செய்வதாக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுகின்ற கேள்வி அழுத்தங்கள் கொடுக்கின்ற பட்சத்தில் தேர்தல் சட்டங்கள் மாறுபடுமா.?





அத்துடன் 28 கடிதங்கள் நியமனத்தை தடுக்க கோரி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது, இதனை வழங்கிய அரசியல் கட்சிகள் யார் என்பதை தேர்தல் ஆணைக்குழு இலங்கை வேலையில்லா பட்டதாரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும். படித்த சமூகத்தின் நியமனத்தை தடுக்கின்ற இவ்வாறான அரசியல் வாதிகள் பெயர்கள் வெளிப்படுத்தவேண்டும்.





இதற்கு கடந்த அரசு இருக்கும் போது வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனம் தடுக்கப்பட்டது என காரணம் காட்டி இந்த நியமனத்தினையும் தடுக்கின்றனர், செயற்திட்ட உதவியாளர் என்பது UNP அரசு உருவாக்கிய நியமனம், பட்டதாரிகள் நியமனம் தொடர்ந்து காலாகாலமாக வழங்கப்படும் வேலைவாய்ப்பு, அரசாங்கம் மாற்றமுற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் பட்டதாரிகள் நியமனத்துடன் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தை ஒப்பிட்டு இதனை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.





நியமனக் கடிதங்களை வழங்கி அதனை தடுப்பது பட்டதாரிகள் மத்தியில் பெரும் உளவியல் ரீதியான தாக்கத்தினை உண்டுபண்ணியுள்ளது. சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பில் கூறியிருந்தார் பட்டதாரிகளை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்று, கடந்த ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்திலேதான் பட்டதாரிகளை உள்வாரி, வெளிவாரி HNDA எனவும் வயது அடைப்படையிலும் பிரித்து ஓரம் கட்டப்பட்டது. தற்போதைய அரசு எந்தவொரு பாகப்பிரிப்பும் இல்லாமல் நியமனத்தை வழங்கியது.





நியமனம் இரத்தானதற்கு எதிர்க்கட்சியை காரணம், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர், உங்களது அரசியல் சுயநலத்திற்காக கஷ்டப்படும் பட்டதாரிகளை பயன்படுத்தாதீர்கள்,





கடிதங்கள் ஸ்பீட் போஸ்ட் டில் அனுப்பப்படுகின்றது என கூறப்படுகிறது, அது ஆமை வேகத்தை விட குறைவான வேகத்திலேயே கடிதங்கள் வருகிறது. அதனால் கடிதங்கள் அனுப்புகின்ற முறைமையினையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.





மட்டக்களப்பில் மொத்தமாக 2625 பட்டதாரிகள் இருக்கின்றார்கள், ஆனால் இதில் 200 கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பது கூட சந்தேகமாகவுள்ளது, தற்போது மட்டக்களப்பில் பல தமிழ் தலைமகள் தேர்தலில் போட்டியிட போகின்றார்கள், இவர்கள் எந்த முகத்தினை வைத்துக்கொண்டு போட்டியிடுவார்கள், பொய்யான வாக்குறுதிகளை கூறுகின்றார்கள், இத்தை வரைக்கும் எந்தவொரு தமிழ் தலைமைகளோ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ இது பற்றி கதைக்க வில்லை, இனியும் கதைக்க இவர்கள் தேவையில்லை.





மேலும் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச போன்றோருக்கு இது பற்றி முன்பு தெரியாதா..? தேர்தல் காலங்ககளில் நியமனங்கள் வழங்க முடியாது என்று, இதிலும் எங்களுக்கு சந்தேகம் தோன்றுகின்றது.எது எவ்வாறு இருப்பினும் எங்களுக்கு தலைமைத்துவ பயிற்சியாவது பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.





எங்களுக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றவுடன் சந்தோசமாக இருந்தது, ஆனால் பிரதேச செயலகத்தில் இணைய போகும்போது அங்கு எங்களை பதிய மறுத்துள்ளனர், தொடர்பு இலக்கங்களை கூட வாங்காமல், மீண்டும் அழைப்பு விடுப்பதாக கூறுகின்றனர், இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்,





இவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளான பட்டதாரி ஒருவர் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி உள்ளார், தற்போது அவர் காப்பாற்றப்பட்டுளார், இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசாங்கம் நல்லதொரு தீர்வினை பெற்றுத்தர  வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். என அவர்கள் தெரிவித்தனர்.


Powered by Blogger.