இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது