ஊரடங்கின் போது மகிந்தவின் வீட்டை உடைத்த கொள்ளையர்கள்



தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டை கொள்ளையர்கள் உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




வீட்டின் முன் பக்க கதவு திறக்கப்பட்டுள்ளதால் அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து தேடிப்பார்த்ததில் கொள்ளையர்கள் கதவை உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.


ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இரவு நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டுக் கதவை உடைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் இந்த வீடு அம்பலாங்கொடை - பட்டபொல வீதியில் போரம்ப பிரதேசத்தில் வீதியோரத்தில் அமைந்துள்ளது. அந்த வீடு பல காலமாக மூடிக் கிடப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


எவ்வாறாயினும் சம்பவம் குறித்து அம்பாலங்கொடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


Powered by Blogger.