இலங்கையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று






இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.





சிலாபம் பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.


சிலாபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்த குடும்பத்தினரே தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.





அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது


Powered by Blogger.