மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என பரவியை வதந்தியை நம்பி குடித்தவர்களில் 300பேர் ஈரானில் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வரை 27000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வராமல் தடுப்பதற்கு ஏராளமான வழிவகைகளை பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னமும் முறையான மருந்துவகைகளை கண்டறியப்படவில்லை என்பது தான் உண்மை.
ஆனால், ஈரான் நாட்டின் ஊடகம் ஒன்றில் அல்கஹால் குடித்தால் கொரோனா தாக்காது என்ற ஒரு செய்தியை படித்த நூற்றுக்கணக்கானோர் மெத்தனால் கலந்த மதுவை குடித்துள்ளனர்.
எனினும், இதனை குடித்தவர்களில் பலர் வாந்தி மயக்கமடைந்து உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியிருப்பதாகவும் 1000 இற்கும் அதிகமானவர்கள் மருத்துவனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பொது மக்கள் எவரும் பரவும் வதந்திகளை நம்பி முறையற்ற செயல்களில் ஈடுபடாமல் பாதுகாப்பான முறையிலான சுகாதாரத் தன்மையை பின்பற்றுமாறும், சுகாதாரப் பிரிவினரும் அரசாங்கமும் அறிவிக்கும் முறைக்கு ஏற்றால் போல் செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.