வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (5) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.