களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அவலநிலை பல அசௌகரியங்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்





களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அறிய முடிகின்றது.






























கட்டடங்களைப் பார்த்துவிட்டு எடை போடாமல் உள்ளே நடப்பவைகளை ஆராய்ந்தால் எத்தனை நோயாளர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தெரியும்.











தாதியர்களும், வைத்தியர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குரிய வசதிகள் ஒழுங்கான முறையில் இல்லை.







 இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு அத்தனை வசதிகள் இருந்தும் அவற்றைப் பரிசோதிப்பவர் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஒரு வைத்தியசாலையில் இரத்தப்பரிசோதனை மிக இன்றியமையாத்து.


பகல் நேரத்தில் இரத்தப் பரிசோதனைக்கு ஒருவர் இருக்கின்றயோதும் இரவில் பரிசோதிப்பதற்கு யாரும் இல்லாத்தால் கல்முனை வைத்தியசாலைக்குச் அனுப்பி பரிசோதித்து எடுக்கின்றனர். ஆனாலும் அது இங்குள்ள இயந்திரங்கள் காட்டும் முடிவுகளைவிட வித்தியாசமாக காட்டுவதனால் வைத்தியர்களும், தாதியர்களும், நோயாளிகளும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். முன்னர் இரத்தப்பரிசோதனைக்காக இருந்தவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.


இந் நிலைக்குக் காரணம் முன்னைய நிர்வாகம் அரசியலை வைத்தியசாலைக்குள் திணித்த்தும் அனைத்திலும் அரசியல் தலையீட்டை கொண்டுவந்த்தும், தமக்கு வேண்டப்படாதவர்களை இடமாற்றம் செய்த்துமேயாகும் என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.











Powered by Blogger.