நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பிலான விசேட அறிவிப்பொன்றை அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த தீர்மானம் அடுத்த வருடம் முதல் அமுலாகவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
முதலாம் தவணை பரீட்சைக் காலத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர நிகழ்வுகள் நடைபெறுவதால் அவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.