சாய்ந்தமருது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பகுதியை நகரசபையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.