தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!



எவரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பிலான தகவல்களை உடனடியாக வெளிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.




நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,


தமிழர்களின் காணிகளை சிங்கள மக்களுக்கு அபகரித்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல.


அவ்வாறான செயற்பாடு அரசாங்கத்தில் உள்ள எவரது கொள்கையும் அல்ல.


வவுனியா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது.


இது தொடர்பிலான காரணிகளை முன்வைக்குமாறு கோருவதுடன், அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்கும் என்றார்.


“வவுனியா, தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் வகையில் இனவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக” தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Powered by Blogger.