இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையானது துரதிஷ்டவசமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்ற தளபதிகளில் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் முகப்புத்தகத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.
நாடு என்ற ரீதியில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.