ரிசாத் பதியுதீனின் சகோதரரை கைது செய்ய சி ஐ டி யினர் வலைவீச்சு!



போலி உறுதிகளை தயார் செய்து காணிகளை கையகப்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரரை கைதுசெய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி ஐ டி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.




மன்னார் - தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் பெறுமதியான 40 ஏக்கர் காணி இவ்வாறு சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான பதுர்தீன் மொஹம்மட் ரிப்கான் சி.ஐ.டி. விசாரணைகளை புறக்கணித்து வந்துள்ளார்.


இந் நிலையில் அவரை தேடி வருவதாக சி.ஐ.டி.யினர் மன்றில் தெரிவித்தனர். அதன்படி அவரது வீட்டுக்கு சென்று அவர் தொடர்பில் விசாரித்ததாகவும் அவர் வர்த்தக நடவடிக்கைக்காக கொழும்புக்கு வந்துள்ளதாக அவரது தயார் கூறிய போதும், ரிப்கானின் தொலைபேசியும் செயழிழந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.


இந் நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகளை புறக்கணித்துள்ள ரிப்கான் பதியுதீனை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.


Powered by Blogger.