முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (7) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்கவும் ரஞ்சன் ராமநாயக்கவும் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வது தொடர்பாக உரையாடிய சில தொலைபேசி உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அதில் தன்னை துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி வழங்குமாறும் அந்த குற்றச்சாட்டை மறைப்பது தொடர்பாகவும் இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.