கோட்டாபயவின் உத்தரவு - விடுக்கப்பட்ட கால அவகாசம்



ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவுக்கமைய பல்வேறு காரணங்களுக்காக படைப்பரிவுகளில் இருந்து சட்டவிரோதமாக விலகிச் சென்றவர்கள் மீளவும் சரணடைவதற்கு ஏழுநாள் கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.




இதன்படி எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் தொடங்கி 07 நாட்களுக்கு இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


அளிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக விலகிச் சென்றவர்கள் மீளவும் படைப்பிரிவில் இணைந்து கொள்ளலாம். அல்லது சட்டரீதியாக விலகிச் செல்லலாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


Powered by Blogger.