பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த தலைமை உத்தியோகத்தர் கைது



நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளராக செயல்பட்ட பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த தலைமை உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




கடந்த 1ஆம் திகதி நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர்தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவரை, அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக், கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.


பெண் ஊழியரை தாக்கிய அந்த உத்தியோகத்தரைக் கைது செய்யவேண்டுமென அரசியல்வாதிகளும் பெண்ணுரிமை பேணும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.


எனினும் குறித்த உத்தியோகத்தர் தலை​மறைவாகியிருந்த நிலையில் அவரை இன்று அதிகாலை செய்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட உத்தியோகத்தரை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Powered by Blogger.