உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆசாத் சாலியிடம் வாக்குமூலம்






உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னிலையாகியுள்ளார்.




வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அவர் முன்னிலையாகியுள்ளார்.


இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவிற்கு சென்ற மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் அக்மீமன தயாரத்ன தேரரும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 47 பேர் சாட்சி வழங்கியுள்ளனர். மேலும், 317 பேர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



Powered by Blogger.