மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு







கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பும் முகவரியற்றவர்களின் முகவரி தேடுபவர்களின் படலமும்





கிழக்கிலே
அரசியல் சாக்கடையில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க பலர் கட்சிகளாகவும் அமைப்புக்களாகவும்
மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
தனிப்பட்ட நோக்கங்கள் உண்டு. அனைத்தும் சுயநலம்.


கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பு எனும் அமைப்பு 05.01.2020 அன்று கூட்டம் ஒன்றினை கூட்டி சில முடிவுகளை
எடுத்துள்ளனர்.














அவர்களின்
முடிவுகளை ஆராய்வதற்கு முன்னர்……


கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பில் இருப்பவர்கள் உருவாக்கிய அமைப்புத்தான் கிழக்குத் தமிழர் ஒன்றியம்
இவ் ஒன்றியமானது இரண்டு மூன்றாக உடைந்த்து. இவ்வாறு ஒரு அமைப்பையே கட்டிக்காக்க முடியாதவர்கள்
எவ்வாறு ஏனைய கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது.


05.01.2020
அன்று கிழக்குத் தமிழர்  கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முடிவுகள்


1. எதிர்வரும்
பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பின் பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட வேண்டும்.
இதற்குள்
இணையாமல் தனித்து தங்கள் கட்சிக்காகவும் தங்கள் தனிப்பட்ட நலனுக்காகவும்
போட்டியிட்டு கிழக்குத் தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து கிழக்குத் தமிழர்களின்
அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்க முனைபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.





 2. கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பில் இணையாமல் தனித்து அல்லது ஒருசிலருடன் இணைந்து தேர்தலில்
போட்டியிடுபவர்கள் ஏன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைய முடியாது என்பதற்கான
காரணத்தை சமூகப் பொறுப்புடன் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையாக வெளிப்படுத்த வேண்டும்.


3. கிழக்குத்
தமிழர் கூட்டமைப்பின் அடுத்த கட்ட அரசியல் முன்னெடுப்புகளை கிழக்குத் தமிழர்
கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு அதற்கான பொதுச்சின்னம் எடுத்தவுடன்
ஒரு வார கால
முன்னறிவித்தலுடன் இக் கூட்டத்துக்கு சமுகமளித்திருப்பவர்கள் அழைக்கப்பட்டு
முடிவெடுக்கப்படும்.


கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்றியைவேண்டுமாம். இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன அரசியல்
பலம் உண்டு. இவர்களின் கீழ் ஒன்றிணைய இவர்களுக்கு என்ன அரசியல் பலம் உண்டு.


கிழக்கைப் பொறுத்தவரையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுமே பலமான மக்கள்
செல்வாக்குள்ள கட்சிகள்.


இக் கட்சிகள் ஏனைய கட்சிகளை
அழைப்பதில் தவறில்லை ஆனால் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைவதற்கு கிழக்குத் தமிழர்
கூட்டமைப்பிற்கு என்ன வாக்கு வங்கி இருக்கின்றது.


தங்களை வளர்த்தெடுக்க
மேற்கொள்ளும் தந்திரங்களே இவைகள். வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிலோ
பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலோ ஒன்றிணையவோ அல்லது பொதுவான
ஒரு பெயரிலோ ஒன்றுபட ஏன் இவர்களால் அழைப்பு விட முடியாமல் உள்ளது. கிழக்குத் தமிழர்
கூட்டமைப்பில் போட்டியிடவேண்டும் எனும் நிபந்தனை ஏன்?


கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில்
இணையாமல் தனித்து அல்லது ஒருசிலருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏன்
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைய முடியாது என்பதற்கான காரணத்தை சமூகப்
பொறுப்புடன் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையாக வெளிப்படுத்த வேண்டும்.


என்று ஒரு தீர்மானம்
எடுத்துள்ளனர். இவர்களுடன் ஏன் ஏனைய கட்சிகள் இணையவேண்டும் இவர்கள் யார்? இவர்களுக்கு அங்கிகாரம் கொடுத்தது யார்?


இவர்கள் இதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்களா? இவர்களின் எதிர்கால திட்டம் என்ன? 





அனைத்துக்கும் அப்பால்
இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகளின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகும் என்பதுடன்
அக் கட்சி மக்கள் மனங்களிலிருந்து இல்லாமல் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.


குறிப்பாக கிழக்கிலே
உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று குறித்த வாக்கு வங்கியை வைத்துள்ள பிள்ளையானின்
கட்சி இல்லாமல் ஆக்கப்படும்.


ஒட்டுமொத்த்த்தில் இத்
தமிழர் கூட்டமைப்பானது மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் ஒரு
அமைப்பாகும். பல உதிரிக் கட்சிகள் அரசியல் இலாபம் தேடவும், செல்வாக்குள்ள கட்சிகளை
வைத்து அரசியல் அடித்தளத்தினை இடவும் எத்தணிக்கும் ஒரு கூட்டத்தின் சதி வலைகளில் சிக்காது
கிழக்கை பாதுகாப்பதே சிறந்த்து.





Powered by Blogger.