முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியினர் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முடிவினை எடுத்திருக்கிறார்.
இது தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளை அவர் மேற்கொண்டுவருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்திருந்த அவர், சரியான முடிவுகளை எடுப்பதற்கு சில நேரங்களில் காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.