ரஜினிக்கு வீசா வழங்க மறுத்ததா இலங்கை அரசு? வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்



தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக கூறப்படும் விடயத்தை இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சு மறுத்துள்ளது.


தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விசா வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.




இந்நிலையிலேயே ரஜினி காந்துக்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.,


அத்துடன் தாம் இந்தியாவின் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இரு உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்த விடயம் குறித்து விசாரித்தாகவும் அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் வௌியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


மேலும் சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்திடமிருந்து தமது உயர்ஸ்தானிகராலயங்களுக்கு எவ்வித விசா கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் வௌியுறவுத்துறை அமைச்சு கூறுகின்றது.


ரஜினிகாந்துக்கு வீசா வழங்க மட்டோம் என இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.,


இந்நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ரஜனிகாந்துக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியான பயணங்களுக்கு அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கை அரசு கூறியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.